OS (Operating System) OPERATING SYSTEM||JSRACADEMY ||#SOFTWARE EDUCATION
OS (Operating System)
கணினியில் இருக்கக்கூடிய வன்பொருள்கள் (Hardware) மற்றும் இன்ஸ்டால் செய்யக்கூடிய மென்பொருள்கள் (Software) ஆகியவற்றினை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கின்ற மிகப்பெரிய வேலையை செய்கின்ற அமைப்புதான் இயங்குதளம்.
இயங்குதளம் என்பது ஒரு மென்பொருள் தான், கணினியில் இருக்கக்கூடிய வன்பொருள்கள் (Hardware) மற்றும் இன்ஸ்டால் செய்யக்கூடிய மென்பொருள்கள் (Software) ஆகியவற்றினை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கின்ற மிகப்பெரிய வேலையை செய்கிறது. பெருவாரியாக “OS” அல்லது ஆங்கிலத்தில் “Operating System” என அழைக்கப்படும் இயங்குதளம் தான் எந்தவொரு கணினியிலும் இருக்கக்கூடிய அடிப்படையான புரோக்ராம் (Program). ஒரு கணினி அல்லது மொபைல் இயங்குவதற்கு “Operating System Program” தான் அடிப்படை. இன்ஸ்டால் செய்திடக்கூடிய மற்ற அப்ளிகேசன்கள் மற்றும் பல புரோக்ராம்கள் இயங்குவதற்கு “Operating System Program” அவசியம்.
கணினியின் input கருவிகளில் வரக்கூடிய தரவுகளை பெறுவது (கீ போர்டு , மவுஸ்) , Output கருவிகளுக்கு தரவுகளை அனுப்புவது (திரை,பிரிண்டர்), கணினியுடன் இணைத்திருக்கும் பிரிண்டர் உள்ளிட்ட கருவிகளை கட்டுப்படுத்துவது, Storage drive களை தொடர்ந்து கண்காணிப்பது, சரியான user தான் கணினியை இயக்குகிறாரா (Login) போன்ற பாதுகாப்பினை வழங்குவது போன்ற பல முக்கிய பணிகளை செய்வது இயங்குதளத்தின் வேலை.
Software’s
Software’s மென்பொருட்கள், கணினி ஒரு குழந்தை மாதிரி நான் என்ன தருகிறமோ கொடுக்கிறமோ அதற்கு ஏற்ப செயல்படும். உதாரணத்திற்கு word excel PowerPoint போன்றவற்றை இயக்க MS office என்கிற மென்பொருள் தேவை, இன்னும் தெளிவா சொல்லனும்டா பிரௌசு பன்ன Firefox chrome chart பன்ன WhatsApp Facebook போன்றவைகள் மாதிரி.
கணினியை virus இடம் இருந்து பாதுகாப்பதும் ஒரு மென்பொருள்தான்
Comments
Post a Comment