குழந்தைகளுக்காக உருவாகும் இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலி!
2012-ஆம் ஆண்டு, பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய இன்ஸ்டாகிராம், உலகம் முழுவதும் ஒரு பில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது. இந்த செயலியை 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உள்ள கட்டுப்பாடுகளின்படி, 13 வயதிற்கு உட்பட்டோர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017- ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் மெசஞ்சர் கிட்ஸ் எனும் செயலியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
#NEWS ON TECHNOLOGY #TAMILTECHNOLOGYNEWS#JSREDUCATION jsrcomputer.com
https://play.google.com/store/apps/details?id=com.app.jsreducation
Comments
Post a Comment