மவுசம் (Mausam) என்ற புதிய மொபைல் செயலியை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மவுசம் (Mausam) என்ற புதிய மொபைல் செயலியை  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைத்து தகவல்களையும் ஒரு மொபைல்போன் வழியாக எளிதில் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்தவகையில் மக்கள், நாடு முழுவதும் ஏற்படும் வானிலை மாற்றங்களை  எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் மவுசம் (Mausam) என்ற புதிய மொபைல் செயலியை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை ICRISAT இன் டிஜிட்டல் வேளாண்மை மற்றும் இளைஞர் குழு, புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM) மற்றும் IMD இணைந்து உருவாக்கியுள்ளன.

இந்த செயலி வானிலை முன்னறிவிப்புகளையும், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் புதுப்பிக்கப்படும் ரேடார் அடிப்படையிலான கணிப்புகளையும் தருகிறது. புவி அறிவியல் அமைச்சகம் தொடங்கப்பட்ட தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த செயலியை, பிளேஸ்டோர் மற்றும் ஆப்ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதில் தொழில்நுட்ப வாசகங்கள் இல்லாமல் தெளிவான முறையில் வானிலை தகவல்களையும் கணிப்புகளையும் மக்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக என்று புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்த மவுசம் (Mausam) நாட்டின் 200 நகரங்களுக்கு தற்போதைய வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் காற்றின் திசை ஆகிய சேவைகளை செயலி வழங்குகிறது.  மேலும், இதில் தகவல்கள் ஒரு நாளைக்கு 8 முறை புதுப்பிக்கப்படுகிறது. சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், நிலவொளி மற்றும் நிலவொளி பற்றிய தகவல்கள், உள்ளூர் வானிலை நிகழ்வுகள் பற்றிய 3 மணிநேர எச்சரிக்கைகள் உள்ளது. இதுமட்டுமல்லாமல்  450 நகரங்களுக்கு கடந்த 24 மணி நேர வானிலை நிலவரம் பற்றிய முன்னறிவிப்பும் உள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு நடைபெறும்  எந்தவொரு தீவிரமான வானிலை நிகழ்வுகளையும் பயனர்களுக்கு எச்சரிக்கும் வகையில் வண்ண குறியீட்டில் அதாவது (சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள்) வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு நாளைக்கு இரண்டு முறை எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.


Comments

Popular posts from this blog

First Aid Training Courses

OUR ACADEMIC STAFF