பேஸ்புக் நிறுவனமும் தனது ஊழியர்களை 2021 ஆம் ஆண்டு ஜூலை வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதியளித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறைகள் முழுவதும் முடங்கியுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தொழில்நுட்ப பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலிருந்தபடியே பணி புரிய அனைத்து நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. 3 மாதங்கள் கழிந்தும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாததால், டுவிட்டர், கூகுள் போன்ற நிறுவனங்கள் தனது ஊழியர்களை 2021 ஆம் ஆண்டு ஜூன் இறுதி வரை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதியளித்துள்ளன.
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனமும் தங்கள் ஊழியர்களை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்துள்ளது.
இது குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அனுப்பிய மின்னஞ்சலில், இது சுகாதாரம் மற்றும் அரசாங்க நிபுணர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில், ஆலோசனை செய்து எடுக்கப்பட்ட முடிவாகும்,' என தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தேவைகளை நிவர்த்தி செய்ய, ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 1,000 டாலர் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment