பெரிய அளவிலான பலூன்கள் மூலம் கென்யாவின் கிராமப்புற பகுதிகளுக்கு இணைய சேவை வழங்கும் திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது..

வளரும் தொழில்நுட்பத்தால் இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவையான உதவிகளை செய்யவும் இணையம் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் நகரத்திலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் கிராம பகுதிகளுக்கு இணைய சேவை வழங்குவது கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கென்யாவில் பலூன்கள் மூலம் கூகுள் நிறுவனம் இணைய சேவை சேவை வழங்கி வருகிறது.

 

ஆப்பிரிக்காவில் முதன்முதலாக அறிமுகமாகியுள்ள பலூன் மூலம் இயங்கும் இணைய சேவை இது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய மற்றும் மேற்கு கென்யாவின் 50,000 சதுர கி.மீ பரப்பளவில் 4ஜி இணைய சேவை வழங்கப்படும் என அந்நிறுவன அறிக்கையில் தெரிவித்துள்ளது. தரையில் இருந்து 20 கி.மீ உயரத்தில் சுமார் 35 அல்லது அதற்கு மேற்பட்ட பலூன்களை பறக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

 

காற்றின் வேகத்தை பயன்படுத்தி இந்த பலூன்களை இயங்க வைக்கின்றனர். தொலைதூர பகுதிகளில் உள்ள கென்ய மக்கள் இதனால் நல்ல பலன் அடைவார்கள் என கூறுகின்றனர். இதற்கு முன்பு நெருக்கடியான சூழலில் அவசரகால இணைய வசதியை பயன்படுத்துவதற்கு இந்த பலூன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள இந்த திட்டம், கொரோனா பாதிப்பால் இணையதளத்தில் தேவை அதிகமானதாலும், வீட்டிலேயே இருந்து வேலை செய்பவர்களையும் கருத்தில் கொண்டும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பலூன் மூலம் இணைய வசதி வழங்கும் திட்டம் கொன்ய மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

First Aid Training Courses

OUR ACADEMIC STAFF